/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காற்றில் சாய்ந்த நெற்கதிர்; கவலையில் விவசாயிகள்
/
காற்றில் சாய்ந்த நெற்கதிர்; கவலையில் விவசாயிகள்
ADDED : நவ 17, 2024 10:07 PM

கூடலுார் ; கூடலுார் தொரப்பள்ளி பகுதியில் அறுவடைக்கு தயாராகி வரும், நெற்கதிர்கள் காற்றில் சாய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதியில், வயல்கள் விளைந்துள்ள நெற்பயிர்களை, அடுத்த மாதம் அறுவடை செய்ய உள்ளனர். தொரப்பள்ளி அருகே உள்ள குணில் பகுதியில் இரவில் நுழையும் காட்டு யானைகள் நெற்கதிரை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் வீசிய காற்றில் நெற்கதிர்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானையை தொடர்ந்து, காற்றிலும் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'தினமும் இரவில் இப்பகுதிக்குள் நுழையும் காட்டு பானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வன ஊழியர்கள் வந்து விரட்டினாலும் அவைகளை வயலுக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. தற்போது, காற்றிலும் நெற்கதிர்கள் சாய்ந்து வருவதால் மேலும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் அறுவடை செய்ய உள்ள நிலையில், காட்டு யானை மற்றும் காற்றில் சேதமடையும் நெற்கதிர்களால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,' என்றனர்.