/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிக்கட்டியில் சிறுத்தை மக்கள் நடமாட அச்சம்
/
பிக்கட்டியில் சிறுத்தை மக்கள் நடமாட அச்சம்
ADDED : ஜன 01, 2024 10:48 PM
குன்னுார்:குன்னுார் பெரிய பிக்கட்டி கிராமத்தில் தொடரும் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. தற்போது பெரிய பிக்கட்டி கிராமத்தில் சிறுத்தை அடிக்கடி உலா வருகிறது. முருகன் கோவில் வளாகத்தில் அதிகாலை கடந்து சென்றது அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியது.
மக்கள் கூறுகையில், ' ஒரு சிறுத்தை அடிக்கடி கிராமத்தில் இரவில் உலா வருவதால், அசம்பாவிதம் நடக்கும் முன்பு, அதனை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை வேண்டும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதியில் கண்காணிப்பு பணி தொடர்கிறது. 'சிசிடிவி' பதிவுகளின் அடிப்படையில், தேவைப்பட்டால் இப்பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

