தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிம்ஸ்பார்க் அருகே குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவதால் அச்சம்

 சிம்ஸ்பார்க் அருகே குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவதால் அச்சம்

 சிம்ஸ்பார்க் அருகே குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவதால் அச்சம்


ADDED : ஆக 01, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 04:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் சிம்ஸ்பூங்கா படகு இல்லம் அருகே, சிறுவர் பூங்கா பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பணியாளர்கள் பார்த்துள்ளனர். இங்குள்ள படகு இல்லம், சிறுவர் பூங்கா பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும், ஜிம்கானா, ஐ.டி.ஐ., சாலை, சிம்ஸ் பார்க் அருகில், 4 குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் இரவு, 9:15 மணியளவில், ஐ.டி.ஐ., சாலை தடுப்பு சுவரின் மீது இரு குட்டி சிறுத்தைகள் ஒன்றின் பின் ஒன்று நடந்து வந்த காட்சி பதிவாகி உள்ளது.

வனத்துறையினர் கூறுகையில், 'இவ்வழியாக பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம்; மக்களும் இரவில் நடமாட வேண்டாம்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us