ADDED : ஆக 01, 2026 11:10 PM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுாரில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த, 10 வயது ஆண் சிறுத்தை குறித்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் 'ஐபீல்டு' எஸ்டேட் பகுதியில் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் வீரமணி மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
சிம்ஸ் பூங்கா வனத்துறை ஓய்வு விடுதி அருகே அதன் உடல் கொண்டு வரப்பட்டு, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமையில், சுற்றுச்சூழல் அமைப்பினர் முன்னிலையில், பிரதே பரிசோதனை செய்து, எரியூட்டப்பட்டது.
வனத்துறையினர் கூறுகையில், 'வனப்பகுதிக்கு அருகே, 50 மீட்டர் துாரத்தில் எஸ்டேட் பகுதியில் இறந்து கிடந்த ஆண் சிறுத்தைக்கு, 10 வயது இருக்கும். அதன் உடலில் காயம் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் மற்ற விபரம் தெரிய வரும்' என்றனர்.
