/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காத்திருந்து காத்திருந்து கால்கள் வலிக்குது; அரசு பஸ்கள் வராததால் பயணிகள் அதிருப்தி

ADDED : செப் 30, 2024 11:02 PM

குன்னுார் : குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு காலையில் 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததால், பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
குன்னுார் -ஊட்டி இடையே, 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது, போதுமான அரசு பஸ்கள் இயக்கப்படாமல், 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேர இடைவெளியில் கூட ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
சில நேரங்களில், ஆர்செடின், துாதுார்மட்டம் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் கண்துடைப்பிற்காக ஒரிரு முறை இயக்கப்படுகிறது. மிக்கேரியில் இருந்து ஊட்டிக்கு இயக்கும் அரசு பஸ் குன்னுார் வரை நீட்டிக்கப்பட்டதும் நிறுத்தப்பட்டது.
இதனால் பயணிகள் 'எக்ஸ்பிரஸ்' பெயரில் இயக்கும் கோவை உள்ளிட்ட சமவெளியில் இருந்து வரும் பஸ்களுக்கு 'லெவல் கிராசிங்' பகுதியில் சாலையில் காத்திருந்து கூட்ட நெரிசலில் பயணம் செய்கின்றனர். இங்கு நிழற்குடை அமைக்க வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக, காலை, 8:00 மணியில் இருந்து 10:00 மணி வரை பீக் ஹவர்ஸ் நேரத்தில் குன்னுார் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து சில நேரங்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.
வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி, அருவங்காடு, காணிக்கராஜ் நகர், பிக்கட்டி, ஆர்.கே எஸ் உள்ளிட்ட பகுதி மக்களும் பஸ்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே, பீக் ஹவர்ஸ் நேரங்களில் பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.