ADDED : ஆக 25, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: வயது முதிர்ந்து, வேட்டையாடும் திறனை இழந்து முகாமிட்டிருந்த பெண் புலி, நேற்று இறந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி வனக்கோட்டம், சிங்காரா வன சரகத்துக்குட்பட்ட கல் குவாரியை ஒட்டி, வயது முதிர்ந்த புலி ஒன்று மெதுவாக நடந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் கேமராக்கள் பொருத்தி, புலியை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை இந்த புலி இறந்தது.