/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் எஸ்டேட்டில் பெண் தொழிலாளி மரணம்: போலீசார் தீவிர விசாரணை
/
தனியார் எஸ்டேட்டில் பெண் தொழிலாளி மரணம்: போலீசார் தீவிர விசாரணை
தனியார் எஸ்டேட்டில் பெண் தொழிலாளி மரணம்: போலீசார் தீவிர விசாரணை
தனியார் எஸ்டேட்டில் பெண் தொழிலாளி மரணம்: போலீசார் தீவிர விசாரணை
ADDED : செப் 29, 2025 09:55 PM
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே, தனியார் எஸ்டேட்டில் பணிபுரிந்த, பெண் தொழிலாளி மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.
கோத்தகிரி ஜக்கனாரை கிராமம் பகுதியில், கிளன்பர்ன் தனியார் தேயிலை எஸ்டேட்டில், சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம், ஓம்நகர் பகுதியை சேர்ந்த, ஜெகதீஷ் குரே என்பவரது மனைவி சிமாதேவி குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்தார்.
இவர், நேற்று காலை அங்குள்ள தேயிலை தொழிற்சாலை அருகே, மர்மமாக இறந்து கிடந்துள்ளார். இத்தகவலின்படி, கோத்தகிரி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனையில், பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில், எஸ்.பி.,நிஷா ஆய்வு செய்தார்.