/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பீல்ட் மார்ஷல் மானெக்சாவின் 17வது நினைவுநாள்; மலர் வளையம் வைத்து ராணுவ அதிகாரிகள் அஞ்சலி

ADDED : ஜூன் 27, 2025 09:16 PM

குன்னுார்; நாட்டின், 8வது ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் சாம் மானெக்சாவின், 17வது நினைவுநாளையொட்டி, ஊட்டியில் ராணுவ பயிற்சி கல்லுாரி உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
நாட்டின், 8வது ராணுவ தளபதியும், உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியும் வகித்த சாம் மானெக்சா, 40 ஆண்டு காலமாக ராணுவ சேவை புரிந்து, 5 போர்களை சந்தித்துள்ளார். பத்ம விபூஷன், பத்ம பூஷன், உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். பாகிஸ்தானை தோற்கடித்து, பல வீரர்களை சரணடைய செய்தவர்.
ராணுவ சேவையில் ஓய்வு பெற்று, குன்னுார் வெலிங்டனில் இருந்த அவர், 2008 ஜூன் 27ல் காலமானார். அவரின் உடல் ஊட்டி பார்சி ஜோராஸ்ட்ரியன் கல்லறையில், புதைக்கப்பட்டது.
நேற்று அவரின், 17வது நினைவு நாளையொட்டி, இவரது நினைவிடத்திற்கு, வெலிங்டன், ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் வீரேந்திர வாட்ஸ் உட்பட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எம்.ஆர்.சி., ராணுவ மையத்தின் ராணுவ வாத்திய இசை முழங்கியதுடன் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெலிங்டன், ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் வீரேந்திர வாட்ஸ் கூறுகையில்,''நம் நாட்டின் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும், ராணுவ தலைவராக பீல்ட் மார்ஷல் சாம் மானெக்சா விளங்கினார். அவரது செயல்களும், வார்த்தைகளும் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன; எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்,'' என்றார்.