/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தீ தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்; கோடையில் வனத்தை பாதுகாக்க அறிவுரை
/
தீ தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்; கோடையில் வனத்தை பாதுகாக்க அறிவுரை
தீ தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்; கோடையில் வனத்தை பாதுகாக்க அறிவுரை
தீ தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்; கோடையில் வனத்தை பாதுகாக்க அறிவுரை
ADDED : பிப் 08, 2024 10:07 PM

பந்தலுார் : தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ், தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பந்தலுார் அருகே தேவாலா வனத்துறை சார்பில், நாடுகாணி, தேவாலா, பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வனச்சரகர் சஞ்சீவி தலைமை வகித்து பேசியதாவது:
கூடலுார் வனக்கோட்டம் என்பது, 'வனம் மற்றும் அதனை சார்ந்த விவசாய தோட்டங்கள் குடியிருப்புகள்,' என, அருகருகே அமைந்துள்ளது.
இதனால், வன விலங்குகள் விவசாய தோட்டங்களில் வருவதும், விலங்கு- மனித மோதல்கள் ஏற்படுவதும் தடுக்க இயலாத சூழலில் உள்ளது.
வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கருதி, ஒரு சிலர் வனப்பகுதிகளுக்கு தீ வைப்பதால், பல அரிய மூலிகை தாவரங்கள், சிறிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன, பறவை இனங்கள் அழிகின்றன.
அத்துடன் பசுமையான வனங்கள் தீயில் கருகுவதால், வனவிலங்குகள் விவசாய தோட்டங்களை நாடி வருவதை தடுக்க இயலாத நிலைக்கு தள்ளப்படும்.
எனவே, வனத்தை பாதுகாக்க கோடை காலங்களில் வனத்துக்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, தர்மபுரியை சேர்ந்த விடியல் கலை குழுவினர் அதன் ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் தலைமையில், தப்பாட்டம், ஒயிலாட்டம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தி, தீ தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வனவர்கள் பாலகிருஷ்ணன், சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

