/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாஸ்டியர் நிறுவன ஊழியர்களுக்காக தீத்தடுப்பு செயல்முறை விளக்கம்
/
பாஸ்டியர் நிறுவன ஊழியர்களுக்காக தீத்தடுப்பு செயல்முறை விளக்கம்
பாஸ்டியர் நிறுவன ஊழியர்களுக்காக தீத்தடுப்பு செயல்முறை விளக்கம்
பாஸ்டியர் நிறுவன ஊழியர்களுக்காக தீத்தடுப்பு செயல்முறை விளக்கம்
ADDED : செப் 26, 2025 08:58 PM

குன்னுார்:
குன்னுார் பாஸ்டியர் நிறுவன ஊழியர்களுக்காக தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குன்னுார் பாஸ்டியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக, தீயணைப்பு நிலைய வளாகத்தில், தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில், தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். தீ பிடித்தால் தண்ணீர் ஊற்றாமல், நனைந்த அடர்த்தியான சாக்குப்பையில் தீயை அணைப்பது, காஸ் சிலிண்டரில் தீ ஏற்பட்டால் தடுப்பது உள்ளிட்ட செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஊழியர்களும் தீயை அணைத்து பயிற்சி பெற்றனர். பாஸ்டியர் நிறுவன இயக்குனர் சிவகுமார், இணை இயக்குநர் டாக்டர் பிரேம்குமார், நிர்வாக அதிகாரி வைர மூர்த்தி, அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.