/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தீயணைப்பு நிலையங்களில் தீ தடுப்பு பயிற்சி முகாம்
/
தீயணைப்பு நிலையங்களில் தீ தடுப்பு பயிற்சி முகாம்
ADDED : அக் 15, 2025 10:54 PM
ஊட்டி: மாவட்ட தீயணைப்பு நிலையங்களில், வாங்க கற்றுக் கொள்ளலாம் தலைப்பில் தீ தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் வெங்கடாச்சலம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில்,' வாங்க கற்றுக் கொள்ளலாம்' என்னும் தலைப்பில் மக்களுக்கு கட்டணமில்லா இலவச தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி முகாம்கள் இரண்டு நாட்கள் நடந்தது.
இந்த பயிற்சி முகாம் காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை; 12:00 மணி முதல் 1:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் , 5:00 மணி வரை இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. பொதுமக்களின் சந்தேகங்களுக்கு தீயணைப்பு துறையினர் விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.