/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
/
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
ADDED : டிச 31, 2025 08:02 AM
குன்னுார்: குன்னுார் கன்னிமாரியம்மன் கோவில் தெருவில் நள்ளிரவில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
குன்னுார் கன்னிமாரியம்மன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நேற்று முன்தினம் தனியாக வீட்டில் படுத்து உறங்கியுள்ளார்.
அதிகாலை, 4:00 மணியளவில் இவரின் வீட்டில் சமையலறை எரிந்ததை கண்டு அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று, தீயை அணைத்தனர்.
இதனால், மற்ற வீடுகளில் தீ பரவுவது தடுக்கப்பட்டது. அதில், 'வாகன டாகுமென்ட்' உட்பட சில பொருட்கள் எரிந்து சாம்பலாகின. காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

