ADDED : ஆக 18, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் சின்ன வண்டி சோலையில் மின்கம்பி மீது விழுந்த கற்பூர மரத்தை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அகற்றினர்.
குன்னுார் சின்ன வண்டிச்சோலை பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 11:15 மணி அளவில் பெரிய கற்பூர மரம் திடீரென சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது. தீயணைப்பு துறைக்கும், மின் வாரியத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. மின் வாரியத்தினர் மின் சப்ளையை துண்டித்த பிறகு, நிலைய அலுவலர் போக்குவரத்து தட்சிணாமூர்த்தி மேற்பார்வையில், தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். நேற்று அதிகாலை, 3:20 மணிவரை 4 மணி நேரம் போராடி மரத்தை வெட்டி முழுமையாக அகற்றினர்.
