‘பிளாஸ்டிக்’ பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம்
‘பிளாஸ்டிக்’ பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம்
ADDED : ஆக 18, 2026 05:10 PM

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்பாடுக்கு தடை உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் துவக்கப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கிரீன் வாரியர் குழுவினர், மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், குன்னூர் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, ஓட்டுப்பட்டறை பகுதியில் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது தெரிய வந்தது.
இவற்றை பறிமுதல் செய்த குழுவினர், 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். ‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தினால், 500 முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்,’என, எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
