/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செயற்கை ஒளியில் மின்மினி பூச்சிகள் கூடலுார் வனத்துறை விழிப்புணர்வு
/
செயற்கை ஒளியில் மின்மினி பூச்சிகள் கூடலுார் வனத்துறை விழிப்புணர்வு
செயற்கை ஒளியில் மின்மினி பூச்சிகள் கூடலுார் வனத்துறை விழிப்புணர்வு
செயற்கை ஒளியில் மின்மினி பூச்சிகள் கூடலுார் வனத்துறை விழிப்புணர்வு
ADDED : ஏப் 06, 2025 02:35 AM

கூடலுார்:கூடலுார் ஜீன்பூல் தாவரவியல் மையத்தில் செயற்கை ஒளியுடன் மின்மினிப் பூச்சிகள் அரங்கம் அமைத்துள்ளனர்.
இன்றைய தலைமுறையினர் மின்மினிப் பூச்சிகளின் அதிசயம், அற்புதத்தை தெரிந்து கொள்ளவும், அவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நீலகிரி மாவட்டம் கூடலூர் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கூடலுார் ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் இருட்டறையில் இரவு சூழலில் மின்மினிப் பூச்சிகளை போன்று ஒளிரும் காட்சியை செயற்கை ஒளியில் உருவாக்கியுள்ளனர்.
மேலும் இந்த அறையினுள் செல்பவர்களுக்கு இரவில் காடுகளில் இருப்பது போன்று உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒலி அமைப்பும் ஏற்படுத்தி உள்ளனர். தற்போது சோதனை முறையில் இந்த அரங்கம் செயல்பட்டு வருகிறது.
வனத்துறையினர் கூறுகையில், 'இரவில் மின்மினி பூச்சிகள் ஒளிரும் அற்புதம் குறித்து, இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் செயற்கை முறை மின்மினிப் பூச்சிகள் அரங்கம் அமைக்கப்பட்டு சோதனை முறையில் செயல்பட்டு வருகிறது. மின்மினி பூச்சிகளை பாதுகாப்பது, அதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கம்' என்றனர்.

