/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இறந்து கிடந்த ஐந்து வயது சிறுத்தை: வனத்துறை விசாரணை
/
இறந்து கிடந்த ஐந்து வயது சிறுத்தை: வனத்துறை விசாரணை
இறந்து கிடந்த ஐந்து வயது சிறுத்தை: வனத்துறை விசாரணை
இறந்து கிடந்த ஐந்து வயது சிறுத்தை: வனத்துறை விசாரணை
ADDED : ஆக 31, 2025 08:21 PM

கோத்தகிரி; கோத்தகிரி அருகே சிறுத்தை இறந்தது கிடந்தது குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி வனக்கோட்டம், கட்டபெட்டு வனச்சரகம், ரேலியா அணை காவல் எல்லைக்கு உட்பட்ட, சின்ன வண்டிச்சோலை வெலிங்டன் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில், 5 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது.
இந்த தகலின்படி, கட்டபெட்டு வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தில் கள ஆய்வு செய்தது.
உதவி வன பாதுகாவலர் மணிமாறன் தலைமையில், முதுமலை புலிகள் காப்பக உதவி வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் மற்றும் எடப்பள்ளி உதவி கால் நடை மருத்துவர் விக்னேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர், தன்னார்வலர்கள் முன்னிலையில், இறந்த சிறுத்தை உடலுக்கு பிரேத பரிசோதனை செய்தனர். பிறகு, பொதுமக்கள் முன்னிலையில் அதே பகுதியில் எரிக்கப்பட்டது.
மருத்துவர்கள் கூறுகையில், 'ஐந்து வயதுடைய ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது, முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடற்கூறுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை வந்த பின்பு, சிறுத்தை இறப்புக்கான முழு விபரம் தெரியவரும்,' என்றனர்.

