/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்லாரில் இருந்து சென்னை செல்லும் பூஞ்செடிகள்
/
கல்லாரில் இருந்து சென்னை செல்லும் பூஞ்செடிகள்
ADDED : பிப் 07, 2024 11:13 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் இருந்து சென்னை மலர் கண்காட்சிக்கு சாமந்தி, சால்வியா பூஞ்செடிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
மேட்டுப்பாளையம் அருகே ஊட்டி சாலையில் முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கல்லார். இங்கு அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது.
இங்கு எலுமிச்சை, கொய்யா, மாதுளை, பலா, திராட்சை, மங்குஸ்தான், துரியன், லிச்சி, ரம்புட்டான், மிளகு கிராம்பு, ஜாதிக்காய் இலவங்கப்பட்டை, போன்றவை பயிரிடப்படுகின்றன. இப்பண்ணை இயற்கை சூழலில் அமைந்துள்ளதால் சிறந்த சுற்றுலா மையமாக விளங்குகிறது. சென்னையில் வரும் பிப்.10 ம் தேதி மலர் கண்காட்சி நடக்கிறது. இதற்கு ஊட்டியில் இருந்து பல்வேறு வகையான பூஞ்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு செல்கின்றன. ஊட்டியில் கடும் பனி நிலவி வருவதால் சால்வியா மற்றும் சாமந்தி பூஞ் செடிகள் வளருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் இந்த செடிகளை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு, 13 ஆயிரம் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது இந்த பூஞ்செடிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அரசு தோட்டக்கலை பண்ணை அலுவலர் ஒருவர் கூறுகையில், சென்னைக்கு கடந்த ஒரு வாரமாக இந்த பூஞ்செடிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.' என்றார்.---

