sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பூக்கள் விலை உயர்வு: வியாபாரிகள் பாதிப்பு

/

பூக்கள் விலை உயர்வு: வியாபாரிகள் பாதிப்பு

பூக்கள் விலை உயர்வு: வியாபாரிகள் பாதிப்பு

பூக்கள் விலை உயர்வு: வியாபாரிகள் பாதிப்பு


ADDED : அக் 11, 2024 10:02 PM

Google News

ADDED : அக் 11, 2024 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டதுடன், விற்பனையும் குறைந்தது.

பந்தலுார் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு, மைசூரு பகுதியில் இருந்து சாமந்தி, செவ்வரளி, மல்லிகை, முல்லை போன்ற பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடும் நிலையில், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பூக்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், ஒரு கிலோ, 80 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட பூக்கள், நேற்று ஒரு கிலோ, 500 ரூபாய் வரை மைசூரில் விற்பனை செய்யப்பட்டது. இதனால், உள்ளூர் பூ வியாபாரிகள் பூக்களை வாங்கி வருவதில் சிக்கல் ஏற்பட்டதுடன், மழையின் காரணமாக பூக்களும் அழுகி வீணாகி வருகிறது.

பூக்கடை உரிமையாளர் தீபக் கூறுகையில், ''சாதாரண நாட்களில் விலை குறைவாக பூக்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், பண்டிகை காலமான தற்போது மைசூரு பூ சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. மேலும் மழையின் காரணமாக பூக்கள் அழுகி வீணாகி வருவதால், வியாபாரிகளான எங்களுக்கு பல்வேறு வகையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

எனினும், வாடிக்கையாளர்களுக்கு மாலை மற்றும் பூ வழங்க வேண்டும் என்பதற்காக தற்போது பூக்களை குறைந்த அளவு வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us