/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீசன் துவங்கிய நிலையில் எல்லையோர வனப்பகுதிகளில் வீசப்படும் உணவு கழிவுகள்! வன உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து
/
சீசன் துவங்கிய நிலையில் எல்லையோர வனப்பகுதிகளில் வீசப்படும் உணவு கழிவுகள்! வன உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து
சீசன் துவங்கிய நிலையில் எல்லையோர வனப்பகுதிகளில் வீசப்படும் உணவு கழிவுகள்! வன உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து
சீசன் துவங்கிய நிலையில் எல்லையோர வனப்பகுதிகளில் வீசப்படும் உணவு கழிவுகள்! வன உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து
UPDATED : ஏப் 08, 2025 06:25 AM
ADDED : ஏப் 07, 2025 09:30 PM

பந்தலுார்: தமிழக- கேரள எல்லை யில் உள்ள, பந்தலுார் சேரம்பாடி மற்றும் நாடுகாணி வனப்பகுதிகளில், பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்களால் வீசி எறியும் உணவு கழிவுகளால், வன விலங்குகளுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊட்டியில் கோடை சீசன் துவங்கிய நிலையில், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடக மாநிலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பந்தலுார் அருகே உள்ள நாடுகாணி, சேரம்பாடி ஆகிய பகுதிகள், தமிழகம், கேரள ஆகியவை மாநில எல்லையில் அமைந்துள்ளன. இந்த பகுதிகள் வழியாக வரும் வாகனங்களை ஆய்வு செய்து, பயணிகளிடம் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் பெறப்பட்டு மாவட்டத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இப்பகுதிகளில் சாலையோரம் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால், பல சுற்றுலா பயணிகள், நீலகிரி மாவட்டத்துக்குள் செல்வதற்கு முன்பு, சாலையோரம் அமர்ந்து உணவு உட்கொண்ட பின், அதன் கழிவுகளை 'பிளாஸ்டிக்' கவர்களில் நிரப்பி மொத்தமாக வனப்பகுதிகளில் வீசிவிட்டு செல்கின்றனர்.
இதேபோல, சேரம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதிகளில், வீடுகளில் வீணாகும் உணவு பொருட்கள் மூட்டைகளாக கட்டி, வனத்தை ஒட்டிய பகுதிகளில் வீசி எறிகின்றனர்.
வன விலங்குகளுக்கு ஆபத்து
இந்த வனப்பகுதிகளில் காணப்படும், யானை, குரங்கு, குறைக்கும் மான் உள்ளிட்ட வனவிலங்குகள், உப்பு கலந்த உணவு பொருட்களை பிளாஸ்டிக் பொருட்களுடன் ருசித்து, நோயால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளை உட்கொள்ளும் யானை உள்ளிட்ட சில விலங்குகள் உயிரிழக்கும் அபாயமும் தொடர்கிறது.
இது போன்ற குற்றங்களை செய்யும் சில பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், உணவை தேடி யானை, குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் எல்லையோர கிராமங்களுக்கு வரும் போது மட்டும் அவற்றுக் எதிரான செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'வன விலங்குகள் உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு, பாதிக்கப்படும் சூழலை தடுக்கும் வகையில், கழிவு பொருட்களை பாதுகாப்பான முறையில் உள்ளாட்சி துப்புரவு பணியாளர்களிடம் மக்கள் வழங்க வேண்டும்.
அல்லது தங்கள் வீடுகளை ஒட்டி குப்பை குழி அமைத்து அதில் பாதுகாப்பாக போட்டு உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் வனத்தில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் உணவு பொருட்களை வீசினால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்,' என்றனர்.
பந்தலுார் வனச்சரகர் அய்யனார் கூறுகையில்,'' நீலகிரிக்கு தற்போது பல்லாயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள் எல்லையோர வனப்பகுதிகளில் உணவு கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி வீசுவதால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க, எல்லைகளில் கண்காணிப்பு பணிக்கு வன ஊழியர்கள் நியமிக்கப்படுவர். வீதிமீறலில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.

