/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி ஈளாடா தடுப்பணை மேம்பாட்டிற்கு... ரூ. 42.69 கோடி ஒதுக்கீடு! கிராமங்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாக வாய்ப்பு
/
கோத்தகிரி ஈளாடா தடுப்பணை மேம்பாட்டிற்கு... ரூ. 42.69 கோடி ஒதுக்கீடு! கிராமங்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாக வாய்ப்பு
கோத்தகிரி ஈளாடா தடுப்பணை மேம்பாட்டிற்கு... ரூ. 42.69 கோடி ஒதுக்கீடு! கிராமங்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாக வாய்ப்பு
கோத்தகிரி ஈளாடா தடுப்பணை மேம்பாட்டிற்கு... ரூ. 42.69 கோடி ஒதுக்கீடு! கிராமங்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாக வாய்ப்பு
ADDED : ஆக 09, 2024 01:33 AM

கோத்தகிரி:கோத்தகிரி நகர தண்ணீர் தேவைக்காக ஈளாடா தடுப்பணையை மேம்படுத்த, 'அம்ரூத்'
திட்டத்தில், 42.69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு நிலை அந்தஸ்து பெற்ற கோத்தகிரி பேரூராட்சியில், 21 வார்டுகளில், 105 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு, 28 ஆயிரத்து, 207 மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியை விரைவில் நகராட்சியாக தரம் உயர்த்த, அரசு பரிசீலித்து வருவது.
நகர மக்களின் தண்ணீர் தேவையை ஈளாடா தடுப்பணை பூர்த்தி செய்கிறது. வறட்சி நாட்களில் கோத்தகிரி நகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது வழக்கமாக உள்ளது. இதனை தவிர்க்க, 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொண்டுவரப்பட்ட 'அளக்கரை மெகா குடிநீர் திட்டம்' தோல்வி அடைந்துவிட்டது.
இங்கு, கோடநாடு காட்சிமுனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, நேரு பூங்கா உள்ளிட்டவைகள் சிறந்த சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன.
இங்கு வசிக்கும் மக்களுடன், சுற்றுலா பயணிகளின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது.
ரூ. 42.69 கோடி ஒதுக்கீடு
இந்நிலையில், 'அம்ரூத் 2.0' திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்புடன், மத்திய அரசு மூலமாக, 2022-23ம் ஆண்டு, 42.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஈளாடா தடுப்பணையை சுற்றிலும் சுவர் அமைத்து, ஏற்கனவே உள்ள அணையின் மட்டம் உயர்த்தப்படும்.
அணையை முழுமையாக துார்வாரி மேற்பகுதியில் உள்ள விவசாய நில ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவுபடுத்தும் பணிகள் நடக்கும். கோத்தகிரி நகரில் ஏற்கனவே, 1,600 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம், 2,600 இணைப்புகள் கூடுதலாக வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஜரூராக நடந்து வரும் பணிகள்
கோத்தகிரியில் குடிநீர் குழாய்கள் பழுதடைந்து பல இடங்களில் தண்ணீர்வீணாகி வருகிறது. இதனைதடுக்க, ஈளாடா தடுப்பணையில் இருந்தும்,அளக்கரை குடிநீர் ஆதாரத்தில் இருந்தும், 'மெகா பைப்லைன்' பொருத்தும் பணி, 50 சதவீதம் முடிந்துள்ளது. மீதிப்பணிகள் நிறைவு பெறும் பட்சத்தில், நகரப் பகுதிக்கு தட்டுப்பாடு இல்லாமல் நிறைவான தண்ணீர்கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் கோத்தகிரியில், மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப, தேவை யான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈளாடா அணை பகுதியில் துறை அலுவலர்களுடன் ஆய்வும் மேற்கொள் ளப்பட்டுள்ளது. அணையின் உடைப்பு சரி செய்யப்பட்டு, அணையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்பு விவசாய நிலங்களை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.