ADDED : ஆக 27, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: கூடலுார் எம்.எல்.ஏ. திராவிட மணி நிருபர்களிடம் கூறியதாவது:
கூடலுாரில் புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை மட்டும் ஈடுபட்டுள்ள நிலையில், அதிரடிப்படையை களம் இறக்கி, புலியை சுட்டு பிடிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், புலியை பிடிக்கும் வரை ஓவேலி சுற்றுவட்டார பள்ளிகளுக்கு விடுமுறை விடவும், தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் வேண்டும். சட்டசபையில்,இதுகுறித்து வலியுறுத்தி பேசியும், தீர்வு காணப்படவில்லை. தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
