ADDED : ஆக 27, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே கையுன்னி தேவாலயத்தில், ‘ஸ்ரேயஸ்’ சமூக சேவை சங்கம் சார்பில், ஓணம் விழா நடத்தப்பட்டது.
நீலகிரி மண்டல இயக்குனர் பாதர் பாதர் வர்கீஸ் விழாவை துவக்கி வைத்தார். கிளை இயக்குனர் பாதர் கீவர்கீஸ் முன்னிலை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் குரியாகோஸ் ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசினார்.
தொடர்ந்து பூக்கோலம், கயிறு இழுத்தல், ஓணப்பாடல், திருவாதிரை நடனம், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கிளை தலைவர் பாபு, சமூக ஒருங்கிணைப்பாளர் அருள் மேரி தேவதாஸ் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்.
