/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுத்தை உயிரிழப்பு வனத்துறை விசாரணை
/
சிறுத்தை உயிரிழப்பு வனத்துறை விசாரணை
ADDED : பிப் 10, 2024 11:39 PM
பந்தலூர்:பந்தலுாரில், 6 வயது ஆண் சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, அத்திச்சால் சாலை ஓரத்தில், நேற்று அதிகாலை சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக சேரம்பாடி வனச்சரகர் அய்யனாருக்கு தகவல் கிடைத்தது. வன குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனைக்காக சேரம்பாடி வனச்சரக அலுவலகம் கொண்டு வரப்பட்டது.
சிறுத்தை உயிரிழந்த பகுதியில் கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் ஆய்வு செய்தார். முதுமலை புலிகள் காப்பகம் கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான, மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து அங்கேயே எரியூட்டினர்.
உயிரிழந்தது 6 வயது ஆண் சிறுத்தை என்றும், சிறுத்தை முகத்தில் லேசான காயம் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

