/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'டிரோன் கேமரா' பயன்படுத்தி யானைகளை விரட்டும் பணி வனத்துறையினர் தீவிரம்
/
'டிரோன் கேமரா' பயன்படுத்தி யானைகளை விரட்டும் பணி வனத்துறையினர் தீவிரம்
'டிரோன் கேமரா' பயன்படுத்தி யானைகளை விரட்டும் பணி வனத்துறையினர் தீவிரம்
'டிரோன் கேமரா' பயன்படுத்தி யானைகளை விரட்டும் பணி வனத்துறையினர் தீவிரம்
ADDED : ஜூன் 20, 2025 06:31 AM

கூடலுார் : கூடலுார் தொரப்பள்ளி ஒட்டிய பகுதிகளில் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை, 'டிரோன்' கேமரா பயன்படுத்தி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
கூடலுார் மாக்கமூலா பகுதியில், மாவட்ட வன அலுவலர் அலுவலகம் அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய வனப்பகுதியில் ஐந்து காட்டு யானைகள் கடந்த சில வாரங்களாக முகாமிட்டுள்ளன. இவைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.
இந்த யானைகள் இரவில் மாக்கமூலா, குனில், அல்லுார்வயல் பகுதிகளுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வன ஊழியர்கள் கண்காணித்து விரட்டினாலும், அவைகள் விவசாய தோட்டங்கள், குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை. மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பயிற்சி உதவி வன பாதுகாவலர் அருள்மொழி வர்மன், வனச்சரகர்கள் ராதாகிருஷ்ணன், மீரான் இலியாஸ், வனவர்கள் வீரமணி குமரன் மற்றும் வன ஊழியர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் தெர்மல் கேமரா டிரோன் பயன்படுத்தி காட்டு யானைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் முகமிட்டுள்ள காட்டு யானைகளை, இரவு நேரங்களில் 'நைட் விஷன்' தெர்மல் கேமரா டிரோன் பயன்படுத்தி விரட்டி வருகிறோம்' என்றனர்.