/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
/
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
ADDED : அக் 10, 2025 10:09 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே கரகம்பாடி பகுதியில் குடியிருப்பை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
பந்தலுார் அருகே கொளப்பள்ளி அரசு பள்ளியின் பின்பகுதியில் கரகம்பாடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக, 7-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த பகுதிக்கு வந்த யானை கூட்டம், சங்கரன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு இடித்து சேதப்படுத்தியது. அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட குடியிருப்பை வனச்சரகர் ரவி தலைமையிலான வனக்குழுவினர் மற்றும் வருவாய் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். குடியிருப்புகள் அருகே முகாமிட்டிருந்த யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் துரத்தினார்கள். -