/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய தபால் தினத்தில் முதல்வருக்கு கடிதம்; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்
/
தேசிய தபால் தினத்தில் முதல்வருக்கு கடிதம்; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்
தேசிய தபால் தினத்தில் முதல்வருக்கு கடிதம்; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்
தேசிய தபால் தினத்தில் முதல்வருக்கு கடிதம்; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்
ADDED : அக் 10, 2025 10:09 PM

பந்தலுார்; தேசிய தபால் தினத்தில் மாநில முதல்வருக்கு பழங்குடியின மாணவர்கள் கடிதம் எழுதினர். பந்தலுார் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய தபால் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
ஆசிரியர் ஜான்சன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்து பேசுகையில்,''பண்டைய காலங்களில் தபால் நிலையங்களில் கிடைக்கும் தபால்கள் மற்றும் அஞ்சல் அட்டைகள் மூலம் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் உறவுகளுக்குள் தகவல் தொடர்பு வைத்திருந்தனர். மாறி வரும் நாகரிக கலாசாரத்தால், சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வது மற்றும் வாழ்த்துக்களை தெரிவிப்பது போன்றவற்றிற்கு மக்கள் தங் களை மாற்றிக் கொண்டுள்ளனர். இதனால், எழுத்து பழக்கம் மாறி, படித்திருந்தும் பெரும்பாலானோருக்கு கையெழுத்து கூட மாறி வருகிறது. தபாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் அக்., 10-ம் தேதி தேசிய தபால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது,''என்றார்.
தொடர்ந்து, பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள், 45 பேர், மாநில முதல்வருக்கு கடிதம் எழுதினர். அதில் தேசிய தபால் தின வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அரசு மூலம் பழங்குடியின மாணவர்களுக்கு படிப்பதற்கான வசதிகள் மற்றும் திட்டங்கள் குறித்து தெரிவித்து, தங்களின் எதிர்கால கனவு குறித்தும் எழுதினர்.மாணவர்கள் கூறுகையில், 'எங்கள் கடிதத்தை படிக்கும் முதல்வர் கண்டிப்பாக எங்களுக்கு பதில் கடிதம் எழுதுவார் என்ற நம்பிக்கை உள்ளது,'என்றனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் நித்யஸ்ரீ, கோமதி, கார்த்திகா, கவுசல்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் நிர்மாதேவி நன்றி கூறினார்.