/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மன நல விழிப்புணர்வு ஊர்வலம்; லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
/
மன நல விழிப்புணர்வு ஊர்வலம்; லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
மன நல விழிப்புணர்வு ஊர்வலம்; லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
மன நல விழிப்புணர்வு ஊர்வலம்; லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : அக் 10, 2025 10:08 PM

ஊட்டி: ஊட்டியில் லாரன்ஸ் பள்ளி சார்பில், மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இதனை ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில், நீலகிரி எஸ்.பி., நிஷா துவக்கி வைத்து பேசுகையில், ''மன நலம் குறித்து ஒவ்வொ ருவரும் விழிப்புணர்வு அடைவது அவசியம். மன அழுத்தத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான ஊர்வலத்தை, பழமையான லாரன்ஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய் துள்ளது பாராட்டத்தக்கது,''என்றார்.தொடர்ந்து, ஊர்வலம், நகரின் முக்கிய சாலைகள் வழியாக, சேரிங்கிராஸ் பகுதியை அடைந்தது. மனநல நிபுணர் டாக்டர் பூர்ணஜித் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மக்களிடையே பேசினார். லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் பங்கேற்று, பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் ராவ், சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை, லாரன்ஸ் பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.