/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீகூர் பகுதியில் சிறுத்தை பலி வனத்துறை விசாரணை
/
சீகூர் பகுதியில் சிறுத்தை பலி வனத்துறை விசாரணை
ADDED : மே 12, 2025 10:50 PM

கூடலுார், ; முதுமலை மசினகுடி சீகூர் வனப்பகுதியில், சிறுத்தை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதுமலை, மசினகுடி வனக்கோட்டம் சீகூர் வனச்சரகம் ஆனைக்கட்டி வனப்பகுதியில், நேற்று முன்தினம், வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியின் போது, ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. துணை இயக்குனர் அருண்குமார், வனச்சர் தயானந்தன் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த சிறுத்தைக்கு, 10 வயது இருக்கும். மற்றொரு வனவிலங்கு தாக்கியதில், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. ஆய்வக பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு கிடைத்த பின்பு உயிரிழப்புக்கான வேறு காரணங்கள் இருப்பின் தெரியவரும்,' என்றனர்.