/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை காலில் சிக்கிய 'பிளாஸ்டிக்' குழாய் அகற்றம்
/
காட்டெருமை காலில் சிக்கிய 'பிளாஸ்டிக்' குழாய் அகற்றம்
காட்டெருமை காலில் சிக்கிய 'பிளாஸ்டிக்' குழாய் அகற்றம்
காட்டெருமை காலில் சிக்கிய 'பிளாஸ்டிக்' குழாய் அகற்றம்
UPDATED : ஜூன் 30, 2025 05:27 AM
ADDED : ஜூன் 29, 2025 11:01 PM

குன்னுார்; குன்னுார் பெட்டட்டி அருகே காட்டெருமையின் காலில் சிக்கிய 'பிளாஸ்டிக்' குழாய் அகற்றப்பட்டது.
குன்னுார் பெட்டட்டி அருகே பின்னங்காலில், பிளாஸ்டிக் குழாய் சிக்கி காயத்துடன் காட்டெருமை ஒன்று நடமாடி வந்தது. இது தொடர்பாக, வனவிலங்கு ஆர்வலர்கள் போட்டோக்கள் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், கட்டப்பெட்டு வனச்சரகர் சீனிவாசன், கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் உட்பட,10 பேர் கொண்ட வனத்துறை குழுவினர், நேற்று காலை, 7:00 மணி முதல் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
குறிப்பிட்ட, பெண் காட்டெருமையுடன், நான்கு காட்டெருமைகள் இருந்தது. புதர் பகுதியில் இருந்து வெளியே வந்தபோது மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
காலில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் குழாயை அகற்றினர். நேற்று மதியம், 1:45 மணி வரை போராடி, சிகிச்சை அளித்து காட்டெருமைக்கு மறுவாழ்வு அளித்தனர். வனத்துறைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.