/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரண உதவி
/
யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரண உதவி
யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரண உதவி
யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரண உதவி
ADDED : ஏப் 22, 2025 11:27 PM

கூடலுார், ; மசினகுடி அருகே காட்டு யானை தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு முதல் கட்ட நிவாரணமாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
முதுமலை மசினகுடியை சேர்ந்தவர் குமாரசாமி. இவர் மனைவி சரசு, 58. இவர், தபால் துறையில் தற்காலிகமாக வேலை செய்து வந்தார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை, 6:20 மணிக்கு பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு, ஸ்கூட்டரில் மசினகுடி திரும்பும் போது, இவர்கள் வந்த ஸ்கூட்டரை தள்ளி விட்டு, தாக்கியதில் சரசு காயமடைந்தார். குமாரசாமி ஓடி உயர் தப்பினார். காயமடைந்த, சுரசு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். மசினகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.
நேற்று, இறந்தவரின் கணவர் குமாரசாமியிடம் வனத்துறை சார்பில் முதல் கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை, மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் பாலாஜி ஆகியோர் வழங்கினர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்தவரின் குடும்பத்தார், உரிய ஆவணங்கள் வழங்கிய பின் மீதமுள்ள, 9.5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்,' என்றனர்.