/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
/
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
ADDED : அக் 27, 2025 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர்: கூடலூர், தெய்வமலை அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
கூடலூர் -- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக, வெளி மாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசிக்க சென்று வருகின்றனர். இவ்வாறு, செல்லும் சுற்றுலா பயணியர் ஊட்டி சாலை தெய்வமலை அருகே, சாலையோர நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்கின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் சாலையிலிருந்து ரசிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆபத்தான பகுதி என்பதால், நீர்வீழ்ச்சி அருகே, செல்வதை தவிர்க்க வேண்டும்.' என்றனர்.

