/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானை தாக்கியதில் வன ஊழியர் காயம்
/
காட்டு யானை தாக்கியதில் வன ஊழியர் காயம்
ADDED : ஜன 13, 2024 02:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி வனச்சரகம் தெராப்பள்ளி சீனக் கொல்லிவயல் வனப் பகுதியில், இன்று காலை, வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதரிலிருந்து வெளியே வந்த காட்டு யானை, தாக்கியதில் தற்காலிக வேட்டை தடுப்பு காவலர் சிவக்குமார், காயங்களுடன் உயிர் தப்பினர். வன ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சிக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.