sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

முதுமலையில் வனத்தீ: 40 ஏக்கர் பாதிப்பு: 6 மணி நேரம் போராடிய ஊழியர்கள்

/

முதுமலையில் வனத்தீ: 40 ஏக்கர் பாதிப்பு: 6 மணி நேரம் போராடிய ஊழியர்கள்

முதுமலையில் வனத்தீ: 40 ஏக்கர் பாதிப்பு: 6 மணி நேரம் போராடிய ஊழியர்கள்

முதுமலையில் வனத்தீ: 40 ஏக்கர் பாதிப்பு: 6 மணி நேரம் போராடிய ஊழியர்கள்


UPDATED : மார் 03, 2024 06:59 AM

ADDED : மார் 02, 2024 11:19 PM

Google News

UPDATED : மார் 03, 2024 06:59 AM ADDED : மார் 02, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;முதுமலையில் ஏற்பட்ட வனத்தீயில், 40 ஏக்கர் வனப்பகுதி எரிந்து பாதிக்கப்பட்டது. 6 மணி நேரம் போராடி வன ஊழியர்கள் கட்டுப்படுத்தினர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. வனப்பகுதிகளில் தாவரங்கள் கருகி, மரங்களில் இலைகள் உதிர்ந்து பசுமை இழந்து காணப்படுகிறது.

வனத்தீயை தடுக்க, வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், தீத்தடுப்பு கோடுகள் அமைத்து வருகின்றனர். மேலும், தேசிய நெடுஞ்சாலையோரம், கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகம் எல்லையை ஒட்டிய பகுதிகளில், செயற்கை தீ மூட்டி, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

முதுமலை வனச்சரகம் சிக்கலா பகுதியில், செயற்கை தீ மூட்டி, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில், நேற்று முன்தினம், வன ஊழியர்கள் ஈடுபட்டனர். மதியம் வேளையில் அந்த தீ எதிர்பாராமல் வனப் பகுதிக்குள் பரவியது. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவியது.

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா தலைமையில் வனச்சரகர்கள் மனோஜ்குமார், பாரத், கணேசன் உட்பட 125 வன ஊழியர்கள் வனத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மதியம், 1:30 மணிக்கு ஏற்பட்ட தீ பரவலை, 6 மணி நேரம் போராடி இரவு, கட்டுப்படுத்தினர்.

சுமார், 40 ஏக்கர் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us