/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் பள்ளி அருகே வனத்தீ பெரும் பாதிப்பு தவிர்ப்பு
/
தனியார் பள்ளி அருகே வனத்தீ பெரும் பாதிப்பு தவிர்ப்பு
தனியார் பள்ளி அருகே வனத்தீ பெரும் பாதிப்பு தவிர்ப்பு
தனியார் பள்ளி அருகே வனத்தீ பெரும் பாதிப்பு தவிர்ப்பு
ADDED : மார் 07, 2024 11:47 AM

கூடலுார்;கூடலுார் அருகே தனியார் பள்ளி அருகே முட்புதர், காய்ந்த மூங்கிலில் வனத்தீ ஏற்பட்டு பாதிக்கபட்டது.
கூடலுார் பகுதியில் நடப்பு ஆண்டு ஜன., முதல், அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு தொடர்வதுடன், கோடை மழையும் ஏமாற்றி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக ஆங்காங்கே வனத்தீ ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கூடலுார் தேவர்சோலை சாலை, புஸ்பகிரி அருகே, தனியார் பள்ளியை ஒட்டிய சிறு வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு வனத்தீ ஏற்பட்டது.
தீ காய்ந்த மூங்கில் மற்றும் முட்புதரில் பரவியது. மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள், அப்பகுதிக்குச் சென்று, தண்ணீரை பாய்ச்சி, ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதனால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.