தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பறவைகள் கணக்கெடுப்பு வன ஊழியர்கள் பங்கேற்பு

பறவைகள் கணக்கெடுப்பு வன ஊழியர்கள் பங்கேற்பு

பறவைகள் கணக்கெடுப்பு வன ஊழியர்கள் பங்கேற்பு


ADDED : மார் 18, 2025 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 04:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார் : கூடலுார் பகுதியில் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வன ஊழியர்கள் தன்னார்வலர்கள் உட்பட, 316 பேர் ஈடுபட்டனர்.

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்காவில், 25 இடங்களில், தன்னார்வலர்கள்; வன ஊழியர்கள் தலா, 5 பேர் வீதம், 100 பேர் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூடலுார் வனக்கோட்டத்தில், 23 இடங்களில் தன்னார்வலர்கள் மற்றும் வன ஊழியர்கள், 138 பேர்; முதுமலை மசினகுடி கோட்டத்தில், 13 இடங்களில் 78 பேர்; பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். பணியின் போது, பறவைகளை இனங்கள் குறித்த விவரங்களை பதிவு செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலை மற்றும் கூடலுாரில் 61 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் என, மொத்தம், 316 பேர் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். கணக்கெடுப்பு பணியின் போது பதிவு செய்த விபரங்களின் அடிப்படையில் பறவைகள் இனங்கள் குறித்து கணக்கெடுப்பு இறுதி செய்யப்படும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us