/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை துரத்திய போது உயிர் தப்பிய வன ஊழியர்கள்
/
யானை துரத்திய போது உயிர் தப்பிய வன ஊழியர்கள்
ADDED : டிச 26, 2024 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே காபிக்காடு பகுதியில், யானை துரத்திய போது வன ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பந்தலுார் அருகே கேரளா மாநிலம் வயநாடு செல்லும் சாலையில், காபிகாடு என்ற இடத்தில் புல்லட் யானை முகாமிட்டு உள்ளது. இந்த யானை சாலை மற்றும் ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில், வன ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று மாலை சாலை ஓரம் வந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்ற போது, யானை வனத்துறையினரை துரத்தியது.
அதில், வனவர் ஆனந்த், வனக்காப்பாளர் ஞானமூர்த்தி உள்ளிட்ட வன ஊழியர்கள் ஆறு பேர், யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.