/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முன்னாள் அமைச்சருக்கு கேசவ மேனன் விருது
/
முன்னாள் அமைச்சருக்கு கேசவ மேனன் விருது
ADDED : அக் 26, 2025 11:18 PM

பாலக்காடு: சுதந்திரப் போராட்ட வீரர் கே.பி., கேசவ மேனன் நினைவு விருதுக்கு, முன்னாள் அமைச்சர் பாலனை தேர்வு செய்துள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் கே.பி., கேசவ மேனன் நினைவு தினம், ஒவ்வொரு ஆண்டும் நவ., 9ம் தேதி அனுசரிப்பது வழக்கம். இதையொட்டி, அவரது நினைவு விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, 47-வது நினைவு நிகழ்ச்சியையொட்டி, இந்த விருதிற்கு கலாசாரத் துறைக்கு விரிவான பங்களிப்பை அளித்த, முன்னாள் அமைச்சர் பாலனை, கே.பி., கேசவ மேனன் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்வு செய்தனர்.
வரும் நவ., 9ம் தேதி, 25,000 ரூபாய் மற்றும் விருதை, தரூரில் நடக்கும் நினைவு நிகழ்ச்சியில், பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், இவ்விருதினை பாலனுக்கு வழங்குவார். எம்.எல்.ஏ., சுமோத் தலைமை வகிக்கும் நிகழ்ச்சியில், முன்னாள் கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றார். விழா ஏற்பாடுகளை, தேர்வு குழு துணைத்தலைவர் முனைவர் முரளி, அறக்கட்டளை நிர்வாகிகளான தாமோதரன்குட்டி, சின்னகுட்டன், பத்மநாதன், கிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

