/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'கூடுதல் நிதி ஒதுக்கி பணிகளை அதிகரிக்க வேண்டும்' :ஒப்பந்ததாரர் மாநில தலைவர் வலியுறுத்தல்

ADDED : அக் 26, 2025 11:16 PM

ஊட்டி: மாநில நெடுஞ்சாலை துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கி பணிகளை அதிகரிக்க வேண்டும். என, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி அருகே, மசினகுடியில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா நடந்தது. நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில், நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் தமிழக அரசுக்கு வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து கூட்டத்தி ல் ஆலோசிக்கப்பட்டது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் திரிசங்கு நிருபர்களிடம் கூறுகையில், '' தமிழக அரசு தங்களது கோரிக்கையை ஏற்று புதிதாக 2000 ஒப்பந்ததாரர்களை பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
கூடுதல் பணிகள் மற்றும் நிதியை ஒதுக்கி அனைவருக்கும் பணி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு சிமென்ட் மீதான ஜி.எஸ்.டி., வரியை, 28 சத வீதத்தில் இருந்து 18 சதவீதம் குறைத்தும் தமிழக சிமென்ட் நிறுவனங்கள் விலை குறைக்காமல் உள்ளனர்.
விலையை குறைத்து இருப்பதாக மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டு பழைய விலைக்கே சிமென்ட் விற்பனை செய்வதால் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதால் ஜி.எஸ்.டி., குறைப்புக்கு ஏற்ப சிமென்ட் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.