/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கத்தியால் குத்தியவருக்கு நான்கு ஆண்டு சிறை
/
கத்தியால் குத்தியவருக்கு நான்கு ஆண்டு சிறை
ADDED : அக் 25, 2024 09:39 PM
கூடலுார்: கூடலுார் அருகே ஏற்பட்ட தகராறில், கத்தியால் குத்திய நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
கூடலுார் தேவாலா அட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரன். கடந்த, 2017ல், இவருக்கும் தேவாலா அட்டியை சேர்ந்த பேபி, 63, என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பேபி, தான் வைத்திருந்த கத்தியால் பரமேஸ்வரனை குத்தி உள்ளார். படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேவாலா போலீசார் வழக்கு பதிவு செய்து, பேபியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கூடலுார் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரணை செய்த உதவி அமர்வு நீதிபதி முகமது அன்சாரி, குற்றவாளி பேபிக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். போலீஸ் சார்பில் அரசு வக்கீல் முருகன் ஆஜரானார்.