/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
/
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
ADDED : நவ 27, 2024 09:14 PM

கூடலுார்; கேரளா வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, தன்னார்வ அமைப்பின் சார்பில் இலவச சைக்கிள், 'லேப்டாப்' வழங்கப்பட்டது. கேரளா வயநாடு மாவட்டத்தில், கடந்த ஜூலை, 30ம் தேதி பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கல், சூரல்மலை கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. அதில், 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ அமைப்புகள் உதவி வருகின்றனர்.
இந்நிலையில், கூடலுாரில் உள்ள சேவாலயம் அறக்கட்டளை சார்பில், சூழல்மலை கிராமத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முரளிதரன் தலைமை வகித்தார். 20 மாணவர்களுக்கு சைக்கிள், மூன்று மாணவர்களுக்கு 'லேப்டாப்' மற்றும் கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த மதிப்பு 3 லட்சம் ரூபாய் ஆகும். நிகழ்ச்சியில், அறக்கட்டளை செயல் தலைவர் கிங்ஸ்டன், தன்னார்வலர் பென்னிஹின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.