/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
30 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள்
/
30 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள்
ADDED : ஜூன் 03, 2025 12:05 AM

ஊட்டி; நீலகிரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களும் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிந்து ஏப்., 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
சில பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்பு அளித்தனர். மாணவர்கள் தங்களது பழைய நண்பர்களை சந்தித்து குதுாகலம் அடைந்தனர்.
நீலகிரியை பொறுத்தவரை, 412 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 30,076 மாணவர்களுக்கு நேற்று முதல் பாடநுால்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பள்ளி சீருடைகளை அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் வழங்கினார். ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் கலெக்டர் லட்சுமி பவ்யா, எம்.எல்.ஏ., கணேசன் ஆகியோர் பங்கேற்று புத்தகங்களை வழங்கினர்.