/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போட்டி தேர்வில் பங்கேற்க இலவச பயிற்சி வகுப்பு
/
போட்டி தேர்வில் பங்கேற்க இலவச பயிற்சி வகுப்பு
ADDED : பிப் 20, 2024 10:35 PM
ஊட்டி:ஊட்டி நகராட்சி கமிஷனர் ஏகராஜ் அறிக்கை:
ஊட்டி நகராட்சி காந்தள் பகுதியில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு சிறந்த அறிவுசார் மையம் மற்றும் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு மத்திய, மாநில அரசுகள் தேசிய வங்கிகள், ரயில்வே மற்றும் ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ்., தேர்வுகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., -பி.எஸ்.ஆர்.பி., -ஆர்.ஆர்.பி., -எஸ்.எஸ்.சி., உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுகளுக்குமான சுமார், 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி படித்து போட்டி தேர்வுகளில் பங்கேற்கலாம்.
பொதுமக்கள், மாணவர்கள் இம்மையத்தினை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டு விரைவில் துவங்கப்பட உள்ள நேரடி மற்றும் 'ஆன்லைன் குரூப்- 4' பயிற்சி வகுப்புகளில் இலவசமாக பங்கேற்று பயனடைய வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

