/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடி மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள்
/
பழங்குடி மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள்
ADDED : ஜூலை 17, 2025 09:27 PM

கூடலுார்; கூடலுார் பழங்குடி மாணவர்கள் பள்ளி இடை நின்றலை தவிர்க்க, 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்கள்; சுகாதார மேம்பாட்டு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
கூடலுார் நாடார் திருமண மண்டபத்தில், நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம் சார்பாக பழங்குடி மாணவர்கள் பள்ளி இடை நின்றலை தவிர்க்க, கல்வி உபகரணங்கள், சுகாதாரம் மேம்பாட்டு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. திட்ட மேலாளர் அபிலாஷ்குமார் வரவேற்றார். சங்க தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் மாநில ஆணையத்தின் உறுப்பினர் பொன்தோஷ், ஆர்.டி.ஓ., குணசேகர், தாசில்தார் முத்துமாரி, நீலகிரி ஆதிவாசி நல சங்க செயலாளர் ஆலுவாஸ், நாடுகாணி வனச்சரகர் ரவி ஆகியோர் பேசினார்.
தொடர்ந்து, 979 பழங்குடி மாணவ, மாணவிகளுக்கு, 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான, கல்வி உபகரணங்கள் சுகாதார மேம்பாட்டு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. விழாவில், திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயா, நீலகண்டன், தன்னார்வலர்கள் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்.