/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உபதலை சாய்நிவாஸ் அரங்கில் இலவச கண் பரிசோதனை முகாம்
/
உபதலை சாய்நிவாஸ் அரங்கில் இலவச கண் பரிசோதனை முகாம்
உபதலை சாய்நிவாஸ் அரங்கில் இலவச கண் பரிசோதனை முகாம்
உபதலை சாய்நிவாஸ் அரங்கில் இலவச கண் பரிசோதனை முகாம்
ADDED : ஜன 31, 2025 11:14 PM
குன்னுார்; குன்னுார் உபதலையில் உள்ள சாய்நிவாஸ் சனாதன அரங்கில், ஸ்ரீ சத்ய சாய் மாருதி சேவா அறக்கட்டளை; பீசலு பவுண்டேஷன் சார்பில், இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
அறக்கட்டளை சுவாமி மேகநாத் சாய்ராம் தலைமை வகித்தார். பீசலு பவுண்டேஷன் நிர்வாகி ஷாலினி முரளிதரன் முன்னிலை வகித்தார்.
'ஐ கேர் மற்றும் டாக்டர் அகர்வாஸ்ல் ஐ' மருத்துவமனையின் டாக்டர் முரளி தலைமையிலான குழுவினர், மருத்துவ பரிசோதனை செய்தனர்.
அதில், அனைவருக்கும் கண் பாதுகாப்பின் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிலருக்கு கண் அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 150 பேர் பங்கேற்றனர்; பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு பரிசோதனை நடந்தது.