/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச கண் சிகிச்சை முகாம்; 230 பேர் பயன்
/
இலவச கண் சிகிச்சை முகாம்; 230 பேர் பயன்
ADDED : ஜன 28, 2024 11:42 PM
கோத்தகிரி:கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சிறுமுகை லயன்ஸ் கிளப் மற்றும் இமானுவேல் கண் நோய் நிவாரணக் குழு சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கண் மருத்துவர் ஷாமிலி தலைமையில், குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இமானுவேல் மருத்துவமனை மருத்துவ குழுவினர், கண்ணில் புரை, நீர் அழுத்தம், நீர்ப்பை அடைப்பு மற்றும் தூரப்பார்வை உட்பட, கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர்.
இதில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 230 நோயாளிகள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். 35 நோயாளிகள் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் நடராஜன் முன்னிலையில், ராம்சந்த் பகுதியை சேர்ந்த, சாமுவேல் ஏற்பாடுகளை செய்திருந்தார்.