/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துாய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்
/
துாய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜன 08, 2025 10:27 PM

கோத்தகிரி; கோத்தகிரி பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், 'ஐ பவுண்டேஷன்' கண் மருத்துவமனை மற்றும் குன்னுார் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த முகாமை, பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராஹிம் துவக்கி வைத்தார்.
முகாமில், ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவர் பிரவின் தலைமையிலான மருத்துவ குழுவினர், கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கிட்ட பார்வை மற்றும் துார பார்வை உட்பட, கண் சம்மந்தமான நோய்களை பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். கண் நோயால் பாதிக்கப்பட்ட பலர், கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
முகாமில், பேரூராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக துாய்மை பணியாளர்கள், 50க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து பயன் அடைந்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் மோனிஷா, மனோஜ், காணி உட்பட பலர் பங்கேற்றனர்.