UPDATED : நவ 22, 2026 06:31 PM
ADDED : நவ 22, 2026 06:27 PM
கோத்தகிரி: நீலகிரி மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில், இலவச மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் இட்டக்கல் கிராமத்தில் நடந்தது.
முகாமில் ஒன்னட்டி, குயின் ஷோலா மற்றும் இட்டக்கல் கிராம மக்கள் பயன்பெறும் வகையில்
காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடந்த இம்முகாமை, நீலகிரி மாவட் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் ராஜேந்திர பிரசாத் துவக்கி வைத்தார்.
ஊட்டி எம்.எல்.ஏ., போஜராஜ் தலைமை வகித்தார்.
கோத்தகிரி லயன்ஸ் கிளப் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
டாக்டர் ஜேன் மார்டினெஸ் தலைமையிலான பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவ குழுவினர், பொதுமக்களை பரிசோதித்து இலவச ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்கினர். ரோட்டரி சார்பில் நிஷா மற்றும் ஹேமா ஆகியோர், 65 பேருக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினர்.
ஒன்னட்டி, குயின் ஷோலா மற்றும் இட்டக்கல் கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
