நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் உபதலை கிராமத்தில்,'பீசலு' அறக்கட்டளை, சாய் மாருதி சேவா அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கை கால் பொருத்துவதற்கான அளவு மற்றும் அதன் திறன் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், பங்கேற்ற முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பீசலு அறக்கட்டளை நிர்வாகி ஷாலினி முரளிதரன், சாய் மாருதி சேவா அறக்கட்டளை நிர்வாகி மேகநாதன் உட்பட பலர் செய்திருந்தனர்.