/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச மருத்துவ முகாம்:160 பேருக்கு சிகிச்சை
/
இலவச மருத்துவ முகாம்:160 பேருக்கு சிகிச்சை
ADDED : ஜன 26, 2025 10:59 PM

குன்னுார், ; நீலகிரி மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கே.எம்.எப்., மருத்துவமனை, குன்னுார் ஸ்ரீ ஜெயின் நவ்யுவக் சங்கம் சார்பில், இலவச கண், காது, பல், எலும்பு, மூட்டு மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது.
குன்னுார் பாலகிளவா, ஜெயின் மண்டபத்தில் நடந்த இந்த முகாமில், அனைத்து கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. காது, மூக்கு, தொண்டை, சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டது.
மூட்டு, முதுகு, கழுத்து, தோள்பட்டை வலி; பல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், கே.எம்.எப்., மருத்துவமனை டாக்டர்கள் கோஷி ஜார்ஜ், ஜாசன் தாமஸ், சாரா, கமலாகர், ஜேன் ஜாய் உட்பட டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். 160 பேர் சிகிச்சை பெற்றனர்.
ஏற்பாடுகளை, ஸ்ரீ ஜெயின் நவ் சங்க தலைவர் நீரஜ், செயலாளர் ரவுனக், பொருளாளர் ஆனந்த், துணைத் தலைவர் அபிநந்தன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

