/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச மருத்துவ முகாம்; 500 பேருக்கு சிகிச்சை
/
இலவச மருத்துவ முகாம்; 500 பேருக்கு சிகிச்சை
ADDED : ஜூலை 20, 2025 10:22 PM

கோத்தகிரி ; கோத்தகிரி கன்னேரிமுக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில், சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம், கோவை டி.ஜே., மருத்துவமனை, சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனை, ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் நடந்த இலவச முகாமை, பொரங்காடு சீமை எட்டூர் தலைவர் ஆலாகவுடர் துவக்கி வைத்தார்.
முகாமில், மருத்துவர்கள் விஜயகிரி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான, 10 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
'பொது ஆலோசனை, குழந்தைகள் நலம், நுரையீரல், இதயம், ஆர்த்தோ, பிசியோதெரபி, மகளிர், தோல், பல் மருத்துவம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, இ.சி.ஜி.,, நுரையீரல் செயல்பாடு சோதனை மற்றும் கல்லீரல் சோதனை,' உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்டவர் பங்கேற்று, பயன் அடைந்தனர். நோய் பாதிக்கப்பட்ட, 20க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
கோத்தகிரி ரோட்டரி சங்க தலைவர் பரமேஷ், செயலாளர் சுந்தர், மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்க தலைவர் சாந்தமூர்த்தி, செயலாளர் விஜய பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தலைவர் தேவராஜ் மற்றும் கமலா சீராளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

